விலைக்கு வாங்க முயற்சிக்கும் சூழ்ச்சி நிறைவேறாது, மிரட்டினால் போராட்டம் வெடிக்கும் -எச்சரிக்கை

Jun 18, 2021 08:22 AM 783

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய தலைவரின் பதவியை அனிதா ராதாகிருஷ்ணன் பறிக்க முயற்சிப்பதாக அதிமுக வார்டு உறுப்பினர்கள் புகார் கூறியுள்ளனர்.

image

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய தலைவராக அதிமுகவை சேர்ந்த ஜெயபதி இருந்து வரும் நிலையில், அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஜெயபதியை தோற்கடிப்பதற்காக, பல்வேறு சூழ்ச்சிகளிலும் அனிதா ராதாகிருஷ்ணன் ஈடுபட்டுள்ளதாக அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதிமுக கவுன்சிலர்களை கூலிப்படையை வைத்து மிரட்டுவதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.image

Comment

Successfully posted