ஊழல் ஒழிப்பு வாரவிழாவை முன்னிட்டு, தூத்துக்குடியில் சைக்கிள் பேரணி

Oct 28, 2018 03:02 PM 280

ஊழல் ஒழிப்பு வாரவிழாவை முன்னிட்டு, தூத்துக்குடியில் சைக்கிள் பேரணியை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார். "ஊழலை ஒழிப்போம் புதிய இந்தியாவை படைப்போம்" என்ற கருத்தை வலியுறுத்தி என்எல்சி நிறுவனம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இதில் கலந்து கொண்டு, பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை சைக்கிளில் தொங்க விட்டவாறு, நகரின் முக்கிய வீதி வழியாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டனர்.

Comment

Successfully posted