சர்கார் படத்தில் சர்சைக்குரிய காட்சிகள் நீக்கம், மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டதற்கு நன்றி - அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

Nov 09, 2018 03:45 PM 252

மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு சர்கார் படத்தில் சர்சைக்குரிய காட்சிகளை நீக்க சர்கார் படக்குழு ஒப்புக் கொண்டதற்கு வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் நன்றி தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு சர்கார் படக்குழு செயல்பட்டுள்ளதாக தெரிவித்தார். படத்தில் வரும் சர்ச்சை காட்சிகளை நீக்க ஒப்புக் கொண்டதற்கு நன்றியும் அவர் கூறினார். படக்குழுவின் இந்த முடிவை வரவேற்பதாகவும் இனிவரும் காலங்களில் அரசியல் நோக்கத்தோடு சர்ச்சைக்குரிய காட்சிகளை வைக்க வேண்டாம் என்று ஆர்.பி உதயகுமார் கேட்டுக் கொண்டார். அரசின் இலவச திட்டங்களை விமர்சிக்க யாருக்கும் தகுதி இல்லை என்றும் விஜய் ரசிகர்களின் வீடுகளிலும் அரசின் விலையில்லா பொருட்கள் உள்ளதாகவும் அவர் கூறினார்.

 

Comment

Successfully posted