திரையரங்குகளைத் திறக்கலாம் - 5ஆம் கட்ட தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு!

Sep 30, 2020 08:29 PM 601

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, மாதந்தோறும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 5-ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, 50சதவீத இருக்கைகளுடன் அக்டோபர் 15-ம் தேதி முதல் திரையரங்குகள் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீச்சல்குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களைத் திறக்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி திறப்பு குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 31-ம் தேதி வரை கட்டுபடுத்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted