நயன்தாரா வரிசையில் உதயநிதியும் இணைகிறாரா ?

Sep 19, 2019 04:50 PM 785


சைக்கோ திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கண் பார்வையற்ற நபராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, முகமுடி,பிசாசு, துப்பறிவாளன் இப்படி வித்தியாசமான திரைப்படங்களை கொடுப்பவர் இயக்குனர் மிஷ்கின்.இவரின் கதைக்களமே அனைத்து திரைப்படங்களிலிருந்தும் சற்று மாறுப்பட்டதாக இருக்கும்.இந்த வரிசையில் ’சைக்கோ ’ என்ற படத்தினை இயக்கி கொண்டிருக்கிறார்.இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி மற்றும் நித்யா மேனன் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இளைராஜா இசையில் உருவாகும் இத்திரைப்படமானது புத்தர் மற்றும் அங்குலிமாலா என்ற கொலையாளியின் சந்திப்பை மையாக கொண்டது .ஒரு கொலையாளி எப்படி புத்தரின் பக்தனாக மாறுகிறார் என்பதை தழுவிய கதை என கூறப்படுகிறது.மேலும் இதில் உதயநிதி ஸ்டாலின் கௌதமன் என்ற ’புத்தர்’ கதாபாத்திரத்தில் கண் பார்வையற்றவராக நடித்துள்ளராம்.’நெற்றிக்கண்’ படத்தில் நயன்தாரா கண் பார்வையற்றவர் போல் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியானதை தொடர்ந்து தற்போது உதயநிதியும் அந்த வரிசையில் இணைந்துள்ளார்.

Comment

Successfully posted