நான் ஒன்றும் அவ்வளவு நல்லவன் அல்ல - தனுஷ் பேச்சால் பரபரப்பு

Oct 10, 2018 03:20 PM 618

நான் ஒன்றும் அவ்வளவு நல்லவன் அல்ல என்று நடிகர் தனுஷ் பேசியுள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

image

பொல்லாதவன், ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து தனுஷ் - வெற்றிமாறன் இணையும் திரைப்படம் வடசென்னை.

மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்படும் இத்திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

அப்போது பேசிய நடிகர் தனுஷ், வடசென்னை திரைப்படத்தில் தனக்கு பதிலாக சிம்பு நடிக்க இருந்ததாக குறிப்பிட்டார்.

 

image

அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று படபிடிப்பும் துவங்க இருந்ததாக அவர் கூறினார்.

அதில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க தன்னை வெற்றிமாறன் அணுகியதாகவும், ஆனால் சிம்பு படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் அளவுக்கு பரந்த மனப்பான்மை கொண்ட நல்லவன் அல்ல தாம் என்று மறுத்துவிட்டதாகவும் தனுஷ் தெரிவித்தார்.

image

இதேநிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன். பொல்லாதவன் படத்திற்கு முன்னதாகவே வடசென்னை படத்திற்கான கதை எழுதப்பட்டு விட்டதாக கூறினார்.

வடசென்னை 40 ஆண்டுகால வரலாற்றை சொல்லும் படம் என்பதால் மூன்று பாகங்களாக வெளிவரவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

முதல்பாகம் வருகின்ற 17-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், இரண்டாம் பாகத்திற்கான படபிடிப்பு துவங்கி விட்டதாகவும் வெற்றிமாறன் தெரிவித்தார்.

வடசென்னை திரைப்படத்தில் தனுஷ், இயக்குனர் ராம், கிஷோர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Comment

Successfully posted