நாகையில் இரவு பகலாக நடைபெறும் நிவாரணப் பணிகள் - மின்கம்பங்கள் சீரமைக்கப்படுவதை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்

Nov 21, 2018 06:10 PM 380

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆலயம் அருகே மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகளை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள நாகை மாவட்டத்தில் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அமைச்சர்கள் பலர் அங்கேயே முகாமிட்டு பணிகளை விரைவுப்படுத்தி வருகின்றனர்.

மாவட்டம் முழுவதும் மின் இணைப்புகளை விரைந்து வழங்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாகை வேளாங்கண்ணி ஆலயம் அருகே நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி,பெஞ்சமின் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பணிகளை எப்படி விரைவாக முடிப்பது என அதிகாரிகளுக்கு அவர்கள் ஆலோசனை வழங்கினர்.

 

 

 

Comment

Successfully posted