குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு நாடு திரும்பினார்

Nov 06, 2018 08:17 PM 313

ஆப்ரிக்கா நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு நாடு திரும்பினார்.

குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு கடந்த அக்டோபர் 31ஆம் தேதி ஜிம்பாப்வே, போட்ஸ்வானா மற்றும் மலாவி உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளுக்கு 7 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்நாட்டு அதிபர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை சந்தித்து பேசிய அவர், அங்கு வசித்து வரும் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்.

மேலும், ஜிம்பாவே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், அந்நாட்டு தலைவர்களுடன் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இருநாடுகளிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்தநிலையில் தனது பயணத்தை முடித்து, குடியரசுத்துணை தலைவர் வெங்கையா நாயுடு, நாடு திரும்பினார்.

 

Comment

Successfully posted