பயிற்சிப் போட்டியில் தொடர்ந்து 5 சிக்ஸர்களை பறக்கவிட்ட தோனி!

Mar 07, 2020 03:20 PM 3696


சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் நட்சத்திர நாயகன் மகேந்திரசிங் தோனி, பயிற்சிப்போட்டியின் போது தொடர்ச்சியாக 5 சிக்ஸர்களை விளாசிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வரும் மார்ச் 29ம் தேதி முதல் ஐபிஎல் திருவிழா தொடங்குகிறது. இந்நிலையில், சென்னையில் முகாமிட்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், சேப்பாக்கம் விளையாட்டு அரங்கில் மார்ச் 2ம் தேதி முதல் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டிக்குப் பிறகு எந்த போட்டிகளிலும் கலந்துகொள்ளாமல் இருந்த, சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ஐபிஎல் போட்டிகள் மூலம் மீண்டும் களமிறங்குகிறார்.

தோனி பயிற்சியில் ஈடுபடுவதை காண்பதற்காகவே சேப்பாக்கம் மைதானத்திற்கு தினமும் படையெடுக்கின்றனர் அவரது ரசிகர்கள். இந்நிலையில், நேற்றைய பயிற்சியின்போது தொடர்ச்சியாக 5 சிக்ஸர்களை தோனி விளாசிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. image

ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவதைப் பொறுத்து உலகக்கோப்பை டி20 போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா, கிடைக்காதா என்பது தெரியவரும் எனும் நிலையில், தோனியை பழைய பன்னீர்செல்வமாக காண்பதற்காக ஆவலாக காத்துக்கிடக்கின்றனர்  கிரிக்கெட் ரசிகர்கள்.

Comment

Successfully posted