என்கிட்ட இப்டி பேசாத... சொருகிடுவேன் : இணையத்தைக் கலக்கும் வைரல் சிறுமி

Apr 30, 2021 03:41 PM 1407

வீட்டு வேலைகள் செய்யாமல் பொழுதை கழிக்கும் தனது அக்காவை, மழலை சிறுமி ஒருவர் பாட்டியாக மாறி திட்டித்தீர்க்கும் வீடியோ இணையத்தில் பரவி பொதுமக்களை கவர்ந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்த அனிஷ் மற்றும் ஆர்த்தி தம்பதியரின் 4 வயது மகள் சப்துனிகா. அக்கா ப்ரீத்தி ஒழுங்காக வீட்டு வேலைகள் செய்வதில்லை என கூறி மழைலை பேச்சில் சரமாரியாக திட்டும் வீடியோ இணையத்தில் பரவி அணைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

என்கிட்ட இப்படி பேசாத அடிச்சிருவேன், சொறுகிருவேன் என்று முகபாவனைகளுடன் கண்ட மேனிக்கு அதட்டி கொண்டிருக்கும் இந்த சுட்டிக்குழந்தை, வீட்டில் இருப்பவர்கள் பேசும் பேச்சுகளை உள்வாங்கி பேசும் வீடியோ சமூக வலைதலங்களில் பரவி வைரலாகி
வருகிறது.

Comment

Successfully posted