அன்றும், இன்றும், என்றும் நயன் தான்.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விக்கி..

Jan 08, 2020 02:52 PM 1089

விக்னேஷ் சிவன் 2012 ஆம் ஆண்டு' போடா போடி 'திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு வெளியான 'நானும் ரவுடிதான்' திரைப்படத்தை இயக்கினார். 

இந்தப் படத்தில் இணைந்த விக்னேஷ் சிவன், நயன்தாரா பின்பு வாழ்க்கையிலும் இணைய முடிவு செய்து விட்டனர்.விக்னேஷ் சிவனை இயக்குனராக அனைவருக்கும் தெரியுதோ இல்லையோ, நயன்தாராவின் காதலராக நிச்சயமாக தெரியும் என்றுதான் சொல்ல வேண்டும். இருவரும் அடிக்கடி சேர்ந்து வெளிநாடு செல்வது மற்றும் கோயிலுக்கு  செல்வது என நேரத்தை ஒன்றாக செலவிடுகின்றனர்.

இந்நிலையில் zee cine awards விழா சமீபத்தில் நடைபெற்றது.இதில் நயன்தாரா கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் எனது. இணை தொடர்ந்து அந்த விழாவில் நயனுடன் விக்னேஷ் சிவன் பங்கேற்கவில்லை, அதனால் இருவருக்கும் காதலில் பிளவு ஏற்பட்டு விட்டது என  செய்திகள் பரவியது. அந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நயனுடன் இருக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Comment

Successfully posted