போய் வேற வேலை இருந்தா பாருங்கடா..வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் சேதுபதி

Feb 12, 2020 04:05 PM 949

நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாகி கொண்டிருக்கிறது.

சமீபத்தில் விஜய் வீடு, பிகில் பட தயாரிப்பாளர் அலுவலகம், பைனான்சியர் அன்புச்செழியன் வீடு இப்படி 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். பின்பு மாஸ்டர் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே விஜயை அவரது வீட்டுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்து வந்து சோதனை நடத்தியது ரசிகர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த வருமான வரித்துறை சோதனையை அடுத்து சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது.அதில் தனியார் கல்வி குழுமத்தை சேர்ந்த ஒருவர் தமிழகத்தில் உள்ள பலரை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்ற முயற்சிப்பதாகவும், அதில் நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நடிகர்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறி விட்டதாகவும் இதற்கான நிகழ்ச்சி வடபழனியில் நடந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வதந்தியை பார்த்துக் கொந்தளித்த நடிகர் விஜய் சேதுபதி இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து 'போய் வேற வேலைய பாருங்கடா 'என்று ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.

 

Comment

Successfully posted