கிராமப்புறங்களில் இணைய சேவை - கூகுள் நிறுவன அதிகாரிகளுடன் அமைச்சர் மணிகண்டன் ஆலோசனை

Oct 26, 2018 05:47 PM 668

கிராமப்புறங்களுக்கு அதிவேக இணைய சேவையை வழங்குவது தொடர்பாக, கூகுள் நிறுவன அதிகாரிகளுடன் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் பேச்சுவார்த்தை நடத்தினார்.அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்ற போது, அங்குள்ள கூகுள் எக்ஸ் நிறுவன உயரதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

அப்போது தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களில் அதிவேக இணையதள சேவையை வழங்க பேச்சுவார்த்தை நடந்தது. இந்நிலையில், தற்போது சென்னை வந்துள்ள கூகுள் எக்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் டாம் மோர் உள்ளிட்ட உயரதிகாரிகள், தலைமைச் செயலகத்தில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனை சந்தித்தனர். அப்போது, மலைப்பகுதி மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு, கம்பியில்லா அதிவேக இணைய சேவையை வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.Comment

Successfully posted