விருத்தாசலம் அருகே மக்காசோளம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி

Nov 13, 2018 09:00 PM 566

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகிலுள்ள காட்டுமைலூர் ஊராட்சியில் மக்காசோளம் பயிரில் படைபுழு தாக்குதலை கண்டறியும் பயிற்சி முகாம் நடைபெற்றது.

பயிற்சி முகாமில் படை புழு தாக்குதலை கண்டறிந்து, அதை தடுக்கும் முறை குறித்து கடலூர் வேளாண்மைதுறை இணை இயக்குநர் அண்ணாதுரை, படைபுழுவின் வளர்ச்சி பருவநிலைகுறித்து மாநில திட்ட துணை இயக்குநர் மோகன்ராஜ், படை ப்புழுவை கட்டுபடுத்தும் முறை குறித்து நல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் கீதா, ஆகியோர் விவசாயிகளுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் விளக்கமளித்தனர்.


நிகழ்ச்சியில் பாசார் ஜெஎஸ்ஏ வேளாண்மை கல்லூரி முதல்வர் அம்பேத்கார், நல்லூர் வேளாண்மை துறை அட்மா மேலாளர் தங்கதுரை, வேளாண்மை அலுவலர்கள் தனவேல், கதிரவன், அறிவழகன் பெரியசாமி, சித்திராசங்கி, கவிதா, அட்மா துணை மேலாளர்கள் சரவணன், பிரகாஸ், மற்றும் கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Comment

Successfully posted

Super User

வாழ்த்துக்கள்