பாலியல் புகார்களை விசாரிக்க தனி அமைப்பு - விஷால் அறிவிப்பு

Oct 14, 2018 05:56 PM 480

 சினிமாவில் பெண் கலைஞர்கள், நடிகைகளின் பாதுகாப்பு உறுதி செய்ய தனி அமைப்பை உருவாக்கி வருவதாக, நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சின்மயியின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிவதாக கூறினார்.


பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க சின்மயி பேசியிருப்பதாக குறிப்பிட்ட விஷால், பாதிக்கப்படும் பெண்கள் உடனடியாக புகார் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


அவ்வாறு கொடுத்தால் நடிகர் சங்கம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்று அவர் உறுதி அளித்தார்.

Related items

Comment

Successfully posted