பலத்த பாதுகாப்புடன் அண்ணா பல்கலைகழகத்தில் வாக்கு இயந்திரங்கள்!

Apr 07, 2021 03:33 PM 442

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், பலத்த பாதுகாப்புடன் மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

தென்சென்னை பகுதிக்கு உட்பட்ட மயிலாப்பூர், வேளச்சேரி, தியாகராய நகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை தொகுதிகளில் பதிவான வாக்குகள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

கல்லூரி வளாகத்தில், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர், ஆயுதப்படை மற்றும் காவல்துறையினர், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 24 மணி நேரமும், சிசிடிவி காட்சிகள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Comment

Successfully posted