கபினி அணை நிரம்பியதால் 55 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

Aug 08, 2019 12:05 PM 1655

கர்நாடகாவில் உள்ள கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து கடந்த மாதம் 23ஆம் தேதி நீர் திறந்து விடப்பட்டது. தற்போது கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணையின் நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 53 புள்ளி 98 அடியாக இருந்தது.

Comment

Successfully posted