தொடர் மழை காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

Sep 25, 2019 01:44 PM 170


நீர்வரத்து அதிகரித்து இருப்பதால், கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் 960 கனஅடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு மூன்றாவது நாளாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அணைக்கு 720 கனஅடிநீர் வந்த நிலையில் இன்று 940 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. 44புள்ளி 28 அடி கொள்ளளவை கொண்ட கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையில் தற்போது 41புள்ளி 82 அடிக்கு தண்ணீர் உள்ளது. தொடர்ந்து நீரின் அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் அணையின் பாதுகாப்பு கருதி 960 கனஅடிநீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Comment

Successfully posted