கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு - நீரில் மூழ்கிய தரைப்பாலம்

Sep 28, 2020 12:46 PM 376

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, சொரக்காய் பேட்டை தரைப்பாலம் நீரில் மூழ்கியது.

ஆந்திர மாநில நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடந்து கனமழை பெய்து வருவதால், கிருஷ்ணாபுரம் அம்மாபள்ளி அணையில் இருந்து 300 கன அடி நீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து நீர் வெளியேற்றப்பட்டதால், கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, சொரக்காய் பேட்டை தரைப்பாலம் மூழ்கியது.

இதனிடையே, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பாலத்தில், பொதுமக்கள் ஆபத்தை உணராமல் வாகனங்களில் கடந்து செல்வதாகவும், சிலர் பாலத்தில் நின்று செல்ஃபி எடுப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். உடனடியாக காவல்துறை அல்லது தீயணைப்புத் துறையினர் அபாய எச்சரிக்கை விடுத்து, பாலத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comment

Successfully posted