ஊராட்சி மன்றத் தலைவர் உள்பட 2 பேர் கொலை - குற்றவாளிகளை நெருங்கிவிட்ட காவல்துறை

Oct 15, 2020 09:48 AM 930

மதுரையில், ஊராட்சி மன்றத் தலைவர் உள்பட 2 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை நெருங்கி விட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார், பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் கொலை தொடர்பான விரிவான அறிக்கையை அனுப்ப, தாழ்த்தப்பட்டோர் ஆணையம், மதுரை மாவட்ட காவல் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், கொலை குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் கொலையாளிகள் பிடிபடுவார்கள் என்றும் தெரிவித்தார். மேலும், மதுரை மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள புகார் மனுக்களை, விரைந்து விசாரித்து தீர்வு காணும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

Comment

Successfully posted