ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகை வழங்க போதிய நிதி இல்லை - மத்திய நிதியமைச்சகம்

Oct 15, 2020 07:32 AM 13714

தமிழக அரசு கூடுதலாக 9,267 கோடி கடன் பெற்றுக் கொள்ள மத்திய நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் கடந்த திங்களன்று நடைபெற்றது. இதில், தமிழக அரசின் சார்பில் பங்கேற்ற மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், நடப்பாண்டுக்கான ஜூலை மாதம் வரை தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையான10,774 கோடி ரூபாயை வழங்குமாறு வலியுறுத்தினார்.

மாநிலங்களுக்கான நிலுவைத் தொகை வழங்கினால் மட்டுமே பொருளதாரத்தை புதுப்பிக்க இயலும் என்றும் அமைச்சர் ஜெயகுமார் குறிப்பிட்டார். இந்த நிலையில், மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகை வழங்க போதிய நிதி இல்லை எனக் கூறியுள்ள மத்திய நிதியமைச்சகம், தமிழக அரசு கூடுதலாக 9,267 கோடி கடன் பெற்றுக் கொள்ள அனுமதி அளித்துள்ளது.

Comment

Successfully posted