மத்திய அரசை "பாரத பேரரசு" என அழைப்போம் : குஷ்பு ட்வீட்

Jun 11, 2021 03:24 PM 2503

மத்திய அரசை "பாரத பேரரசு" என அழைப்போம்,என்று பாஜகவைச் சேர்ந்தவரும் நடிகையுமான குஷ்பு ட்வீட் செய்துள்ளார். கடந்த சில நாட்களாக மத்திய அரசை, அரசியல் தலைவர்கள் பலரும் ஒன்றிய அரசு என குறிப்பிட்டு வருகின்றனர்.இதனால்,மத்திய அரசுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில்,அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள்,'மக்கள் எப்போதும் அழைப்பது போல் 'மத்திய அரசு' என்றே அழைக்கலாம் என்று கூறியிருந்தார். இந்நிலையில்,மத்திய அரசை "பாரத பேரரசு" என அழைப்போம்,என்று பாஜகவைச் சேர்ந்தவரும் நடிகையுமான குஷ்பு ட்வீட் செய்துள்ளார்.

 

இதுகுறித்து குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

பல ஆண்டுகளாக எதிர்ப்பில் இருந்தபோதிலும்,மத்திய அரசு என்று அழைப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.எங்கள் தமிழக மாநிலத்தில்,தரம் தாழ்ந்த அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. எனவே,தமிழகத்தில் மத்திய அரசை 'ஒன்றிய அரசு' என அழைத்தால்,நாங்கள் 'பாரத பேரரசு' என்று அழைப்போம்.இது, அவர்களுக்கு மேலும் புரிந்துகொள்ள உதவும் என்று நான் நம்புகிறேன்.

மேலும்,மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பதில் பெருமிதம் கொள்கிறவர்கள் அனைவரும்,மத்திய அரசின் அதிகபட்ச நலன்களை அனுபவித்து வருபவர்கள்தான்",என்று கூறி பதிவிட்டுள்ளார்.

Comment

Successfully posted