மேற்கு வங்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு!

Apr 22, 2021 10:11 AM 408

மேற்கு வங்கத்தில் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

294 தொகுதிகள் கொண்ட மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 6ஆவது கட்டமாக 4 மாவட்டங்களில் உள்ள 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். 6ஆம் கட்ட வாக்குப்பதிவில் 306 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் வாக்களிக்கின்றனர். அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாத வகையில் அனைத்து வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Comment

Successfully posted