நீ பண்ணுனது பெரிய தப்பு கவின்..என்னதான் நடக்குது பிக்பாஸ் வீட்டில் ?

Jul 19, 2019 01:10 PM 595

இன்று பிக்பாஸ் விட்டில் 26வது நாள்.முதல் நாள் முதலே கவின் வீட்டில் இருக்கும் பெண்களிடம் நெருக்கமாக பழகினார்.முதலில் அபிராமி கவினை காதலிப்பதாக கூறினார்.பின்பு அபிராமி கவினிடம் பேசுவதையே நிறுத்திவிட்டார்.மீரா, தர்ஷனை காதலிப்பதாக ஒரு புறம் கூற,தர்ஷனும் அதனை ஏற்க மறுத்துவிட்டார்.இப்படி காதலால் நிரம்பிய வீடாக தற்போது பிக்பாஸ் வீடு இருக்கிறது.

நேற்று பிக்பாஸ் வீட்டில் கொஞ்சம் சர்ச்சை கொஞ்சம் சோகமாகவும் இருந்தது.கவினிடம் சாக்‌ஷி பேசினால் அது லாஸ்லியாவிற்கு பிடிக்கவில்லை.இப்படி கவின் மீது லாஸ்லியா, சாக்‌ஷி possessive-ஆக இருப்பதால் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இன்றைய பிக்பாஸ் ப்ரோமோவில் கவின் லாஸ்லியாவிடம் கார்டன் ஏரியாவில் உட்கார்ந்து பேசிக்கொண்டிக்கிறார்.லாஸ்லியா கவினிடம், நீ பண்ணுனது தப்பு கவின், பெரிய தப்பு.ஒருத்தவங்க feelings-ஓட விளையாடுறது மாதிரி பெரிய தப்பு எதுவும் இல்ல , நீ என்னோட பேசுறது கூட நடிக்கிற மாதிரி தான் இருக்கு, எல்லா பிரச்சனையும் என்னால வந்த மாதிரி இருக்கு என லாஸ்லியா கூற, கவினோ I'm Done என கூறுகிறார்.லாஸ்லியா நானும் Done என கோபமாக கூறுவிட்டு வேகமாக எழுந்து சென்றுவிடுகிறார்.

Comment

Successfully posted