இன்றைய பங்கு சந்தை நிலவரம் என்ன ?

Oct 10, 2019 03:43 PM 138

இந்திய பங்கு சந்தைகள் சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன... இவற்றின் நிலவரம் என்ன ?

மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 300 புள்ளிகள் மேல் குறைந்து, 37 ஆயிரத்து 827 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. இதேபோல், தேசியப் பங்குச் சந்தை குறியீடான நிப்டி 90 புள்ளிகள் மேல் குறைந்து, 11 ஆயிரத்து 215 புள்ளியாக வர்த்தகமாகி வருகிறது. உலகப் பங்குச் சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.

அமெரிக்கப் பங்குச் சந்தை குறியீடான நாஸ்டேக் 7 ஆயிரத்து 903 புள்ளிகளுடனும், லண்டன் பங்குச் சந்தை குறியீடான FTSE 7 ஆயிரத்து 139 புள்ளிகளுடனும், பிரான்ஸ் பங்குச் சந்தை குறியீடான CAC 5 ஆயிரத்து 491 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி வருகிறது.

ஜெர்மனி பங்குச் சந்தை குறியீடான DAX, 12 ஆயிரத்து 40 புள்ளிகளுடனும், ஜப்பான் பங்குச் சந்தை குறியீடான NIKKEI, 21 ஆயிரத்து 551 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி வருகிறது. ஹாங்காங் பங்குச் சந்தை குறியீடான HANG SENG, 25 ஆயிரத்து 702 புள்ளிகளுடனும், சீனப் பங்குச் சந்தை குறியீடான Shaz, 2 ஆயிரத்து 947 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.

Comment

Successfully posted