8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை; மேஜைகளில் மாற்றமில்லை: தேர்தல் ஆணையர் சொன்னது என்ன?

Apr 23, 2021 01:27 PM 1918

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாஹூ தெரிவித்ததாவது: 

தற்போது வரை மேஜைகளின் எண்ணிக்கையில் மாற்றமில்லை - 14 மேஜைகளில் தான் வாக்கு எண்ணிக்கை உறுதி என செய்யப்பட்டுள்ளது.

எக்காரணத்தை கொண்டும் மேஜைகளின் எண்ணிக்கையை குறைக்க கூடாது என அரசியல் கட்சிகள் வலியுறுத்தியிருந்தன

மே 2 ஆம் தேதி 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்

வாக்கு எண்ணிக்கைக்காக சுகாதாரத்துறையுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது

வாக்கு எண்ணிக்கையின் போது பங்கேற்கும் அனைவருக்கும் கொரனா பரிசோதனை கட்டாயம் என சில மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஒட்டுமொத்தமாக கொரனா பரிசோதனை செய்யலாமா என்பது ஆலோசனை நடைபெற்று வருகிறது. விரைவில் சுகாதாரத்துறை சுற்றறிக்கை அதற்கான அனுப்புவார்கள்

தமிழகத்தில் கொரனா பரவல் தொடர்பான தகவலை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்து வருகிறோம்

Comment

Successfully posted