பிறந்தநாள் surprise-க்கு ’நன்றி தங்கமே’...விக்கி இன்ஸ்டா பதிவு

Sep 18, 2019 06:43 PM 583

விக்னேஷ் சிவனின் பிறந்தநாளுக்கு நயன் கொடுத்த surprise-ல் நெகிழ்ந்த விக்னேஷ் சிவன், தற்போது நயன்தாராவின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு நன்றி தங்கமே எனக் கூறியுள்ளார்.

நானும் ரவுடி தான் திரைப்படத்தில் இணைந்த நயன் - விக்னேஷ் சிவன் ஜோடி இன்று வரை தொடர்கிறது.அனைவரும் பொறாமைப்படும் காதல் ஜோடியாகவே இருவரும் திரைத்துறையில் வலம் வருகின்றனர்.தற்போது விக்னேஷ் சிவன் தயாரிப்பில் ‘நெற்றிக்கண்’என்ற திரைப்படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.அதில் அனிருத் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் கலந்துக்கொண்டனர்.பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருவரும் கருப்பு நிறத்தில் உடை அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை விக்னேஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில்’இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு நன்றி தங்கமே.இந்த பிறந்தநாள் எனக்கு ஆசிர்வதிக்கப்பட்ட பிறந்தநாள், என்னுடன் இருந்த அனைத்து நண்பர்களுக்கு நன்றி என கூறியுள்ளார்.

Comment

Successfully posted