கிருஷ்ணகிரியில், காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம்

Aug 19, 2019 02:27 PM 120

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரப்பள்ளி அருகே 2 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணைப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக 2 யானைகள் சுற்றித் திரிகின்றன. இந்த யானைகள் கர்நாடக பகுதிக்குச் செல்வதும் பின்னர் தமிழக பகுதிக்கு வருவதும் என இப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளன. சித்தனப்பள்ளி தைலந்தோப்பில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் ஆவலப்பள்ளி, நந்திமங்கலம், கெலவரப்பள்ளி, தட்டிகானப்பள்ளி உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட ஊர்களில் உள்ள பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அண்மையில் இந்தக் காட்டு யானைகள் தாக்கியதில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் பலியானது குறிப்பிடத் தக்கது.

Comment

Successfully posted