”வேலை ஏற்பாடு செய்து தருகிறேன்; யாரையும் ஏமாற்றாதீர்கள்” - சோனு சூட் வேண்டுகோள்

Sep 30, 2020 02:23 PM 1048

தனது பெயரைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட வேண்டாம் என்று இந்தி நடிகர் சோனுசூட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா காலத்தில் பல்வேறு மக்களுக்கு உதவி செய்து வரும் பாலிவுட் நடிகர் சோனுசூட் பெயரில், ஆன்லைனில் மோசடி நடந்துள்ளது. மர்ம நபர் ஒருவர் தன்னை சோனுசூட் என்றும், ரூ.1,700 செலுத்தினால் உதவி கிடைக்கும் என்று கூறியும் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சோனுசூட், மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு வேலை ஏற்பாடு செய்து தர தயாராக இருப்பதாகவும், யாரையும் ஏமாற்ற வேண்டாம் என்றும் கேட்டுகொண்டுள்ளார்.

Comment

Successfully posted