ஒருதலைக் காதலால் திருமணமான பெண் மீது பெட்ரோல் ஊற்றிய இளைஞர்

Feb 21, 2020 04:52 PM 303

கடலூர் மாவட்டம், வடலூரில் ஒருதலைக் காதலால், திருமணமான பெண்ணை இளைஞர் ஒருவர், பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெய்வேலியை சேர்ந்த சலோமி, வடலூரில் உள்ள கடையில் வேலை பார்த்து வருகிறார். நெய்வேலியில் இருந்து தினமும் இவர் பேருந்தில் வேலைக்கு சென்று வரும், பேருந்து ஓட்டுநர் சுந்தரமூர்த்தியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனை தவறாக புரிந்து கொண்ட சுந்தரமூர்த்தி ஒருதலையாக சலோமியை காதலித்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் சுந்தரமூர்த்தி உடன் பேசாமல் சலோமி தவிர்த்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சுந்தரமூர்த்தி, சலோமி வேலை பார்க்கும் கடைக்கு சென்று அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த சலோமி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். இதனிடையே, சுந்தரமூர்த்தியை கைது செய்த வடலூர் காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment

Successfully posted