சென்னையிலிருந்து இருமுடி கட்டி சபரிமலை புறப்பட்ட பெண் ஐயப்ப பக்தர்கள் 

Oct 18, 2018 08:18 PM 721

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்வது சர்ச்சையாகியுள்ள நிலையில், சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் இருந்து பெண்கள் இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்றுள்ளனர். 

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் புறப்பட்டு செல்கின்றனர்.

ஆனால் ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்லக்கூடாது எனவும், தொன்று தொட்டு வரும் பழக்கத்தை மீறக்கூடாது என்று ஐயப்ப பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

எனவே, சபரிமலைக்கு வரும் பெண்கள் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தப்படுகின்றனர். சபரிமலை விவகாரம் வலுத்து வரும் நிலையில், சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் இருந்து பெண்கள் இருமுடிகட்டி சபரிமலைக்கு செல்கின்றனர்.

தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். அதேசமயம், பாரம்பரியத்தை காக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Comment

Successfully posted