பேஸ்புக்கில் பழகிய நபர் பேசாததால் தற்கொலை செய்துகொண்ட பெண்!

Nov 19, 2020 08:40 PM 569

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், முகநூலில் பழகிய நண்பர் தன்னுடன் தொலைபேசியில் பேசவில்லை எனக் கூறி, பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பொள்ளாச்சி தொழில்பேட்டை பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி என்பவர், கணவன் உயிரிழந்த நிலையில், தமது 13வயது மகனுடன் வசித்து வந்தார். புவனேஸ்வரிக்கு, முகநூல் வழியாக பொள்ளாச்சியைச் சேர்ந்த காஜாமைதீன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், காஜாமைதீன் புவனேஸ்வரியுடன் தொலைபேசியில் பேச மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர், காஜாமைதீனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் தொடர்பாக நகர கிழக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comment

Successfully posted