புதுவையில் உலக யோகா திருவிழா தொடக்கம்

Jan 05, 2020 01:48 PM 782

புதுவையில் 4 நாட்கள் நடைபெறும் உலக யோகா திருவிழாவை முதலமைச்சர் நாராயணசாமி துவக்கி வைத்தார்.

புதுச்சேரி அரசு சுற்றுலா துறை சார்பில் 4 நாட்கள் நடைபெறும் 26-வது அகில உலக யோகா திருவிழா துவங்கியது. புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்று, உலக யோகா திருவிழாவை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஹாங்காங், ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 100 யோகா கலைஞர்கள் மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி, ஒரிசா, மேற்குவங்கம், ஆந்திரா, உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 800 யோகா கலைஞர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். 6 மற்றும் 7ம் தேதிகளில் முருங்கம்பாக்கம் கலை மற்றும் கைவினை கிராமத்தில் யோகா போட்டிகள் நடக்கவுள்ளது.

Comment

Successfully posted