முழங்கால் அறுவை சிகிச்சைவெற்றி... மருத்துவர்களுக்கு யார்க்கர் நடராஜன் நன்றி

Apr 28, 2021 09:51 AM 7013

இன்று முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் என இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றிருந்த நடராஜன் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக சில நாட்களுக்கு முன்னதாக அறிவித்து இருந்தார்.

அதாவது நடராஜனுக்கு முழுங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்த அவர், சிகிச்சைக்காக பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடெமிக்கு செல்ல உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் அவருக்கு இன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், அறுவை சிகிச்சை தொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், இன்று முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். எனக்கு சிறப்பான சிகிச்சையளித்த மருத்துவக் குழு, அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மேலும் பிசிசிஐ மற்றும் நான் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ள அனைவருக்கும் நன்றி எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து #நடராஜன் உடல்நிலை என்ற தனியடைவு (ஹேஷ்டேக்) சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Related items

Comment

Successfully posted