கொரோனா பாதிப்பு- ஸ்பெயினில் இளம் கால்பந்து பயிற்சியாளர் பலி!

Mar 17, 2020 05:16 PM 642

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயின் நாடுகளில் அதிக அளவில் உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.இந்நிலையில், கொரோனா வைரசுக்கு ஸ்பெயினை சேர்ந்த கால்பந்து பயிற்சியாளர் பலியாகி உள்ளார்.

ஸ்பெயினை சேர்ந்த 21 வயதான பிரான்சிஸ்கோ கார்சியா, அங்குள்ள அட்லெடிகோ போர்டா அல்டா கிளப்பில் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, அவர் ‘‘கோவிட் 19’’ எனும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டார். முழுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, சிகிச்சை பலன் அளிக்காமல் கொரோனா வைரசுக்கு அவர் பலியானார். இந்த வைரசுக்கு பலியான இளம் வயதானவர் கார்சியா ஆவார். அவரது மறைவுக்கு அட்லெடிகோ போர்டா அல்டா கிளப் இரங்கல் தெரிவித்துள்ளது. இது மிகவும் துரதிருஷ்டவசமானது என்று அந்த கிளப் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted