ஆபரேஷன் சிந்தூர் - 400 விஞ்ஞானிகள் 24 மணி நேரமும் உழைத்தனர்
ஆபரேஷன் சிந்தூரில் தேசிய பாதுகாப்பு தேவைகளுக்காக 400 விஞ்ஞானிகள் 24 மணி நேரமும் உழைத்தனர்
சின்கியுபீல்ட் கோப்பை ((Sinquefield)) செஸ் போட்டியில் தமிழக வீரர்கள் பிரக்ஞானந்தா மற்றும் குகேஷ் ஆகியோர் ஆடிய ஆட்டங்கள் டிரா, போட்டியின் தரவரிசை பட்டியலில் பிரக்ஞானந்தா 2.5 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், 2 புள்ளிகளுடன் குகேஷ் நான்காமிடத்திலும் உள்ளனர்.
சின்கியுபீல்ட் கோப்பை ((Sinquefield) செஸ்; பிரக்ஞானந்தா நம்பர் 2; குகேஷ் ஆட்டம் டிரா
செயின்ட் லூயிஸ்: சின்கியுபீல்ட் கோப்பை செஸ் போட்டியின் 4வது சுற்றில் நேற்று, இந்தியாவை சேர்ந்த உலக சாம்பியன் குகேஷ், பிரக்ஞானந்தா ஆகியோர் மோதிய போட்டிகள் டிராவில் முடிந்தன. 4 சுற்றுகள் முடிவில் பிரக்ஞானந்தா 2ம் இடத்தில் உள்ளார். அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் செயின்ட் லூயிஸ் நகரில் சின்கியுபீல்ட் கோப்பைக்கான செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த 4வது சுற்றுப் போட்டி ஒன்றில் தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, அமெரிக்க வீரர் சாமுவேல் செவியனுடனான போட்டியில் டிரா செய்தார். தமிழகத்தை சேர்ந்த உலக சாம்பியன் குகேஷ், பிரான்ஸ் வீரர் வஷியர் லாக்ரேவ் இடையே நடந்த போட்டியும் டிரா ஆனது. அமெரிக்க வீரர் பேபியானோ கரவுனா, உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக் அப்துஸட்டோரோவ் உடனான போட்டியில் வெற்றி பெற்றார். நேற்று நடந்த போட்டிகளில் இப்போட்டியில் மட்டுமே வெற்றி கிடைத்தது. இன்னும் 5 சுற்றுகள் நடக்கவுள்ள நிலையில், நேற்றைய நிலவரப்படி, அமெரிக்க வீரர் கரவுனா 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். பிரக்ஞானந்தா, அமெரிக்க வீரர் ஆரோனியன் ஆகிய இருவரும் தலா 2.5 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளனர். குகேஷ், வெஸ்லி, ஃபிரோஸா, வஷியர், செவியன் ஆகியோர் 2 புள்ளிகளுடன் 4ம் இடத்தில் உள்ளனர்.
News Editor and News Collector
ஆபரேஷன் சிந்தூரில் தேசிய பாதுகாப்பு தேவைகளுக்காக 400 விஞ்ஞானிகள் 24 மணி நேரமும் உழைத்தனர்
தென்கொரியாவை 4க்கு 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி
ஷர்துல் தாக்கூர் கேப்டனான நிலையில் துலீப் கோப்பைத் தொடரில் சாதாரண வீரராக களம் இறங்கும் பரிதாபம்