• Sat, Sep 2025

60 நாள் காசா போர் நிறுத்த பரிந்துரை ஏற்பு

60 நாள் காசா போர் நிறுத்த பரிந்துரை ஏற்பு

பணயக் கைதிகளை விடுவிப்பதற்காக, இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான 60 நாள் காசா போர் நிறுத்தப் பரிந்துரையை ஹமாஸ் ஏற்றுக் கொண்டதாக தகவல். ஹமாஸ் அமைப்பினர் பணயக்கைதிகளை விடுவித்தால், அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்படலாம் என்றும் தகவல்.

60 நாள் காசா போர் நிறுத்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட ஹமாஸ் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக வெற்றிபெறும் வரை காசா மீதான தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் தொடர்ந்து கூறி வருகிறது. இதுதான் தங்கள் நாட்டிற்கான ஒரே பாதுகாப்பு என  அந்நாட்டு பிரதமர் நேதன்யாகு உறுதிப்பட தெரிவித்து வருகிறார.இதற்கிடையே காசா மீதான தாக்குதலில் அங்குள்ள மக்கள், குறிப்பாக குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்து வரும் பரிதாப நிலை  நிலவுகிறது. இதனால் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றனர்.இதற்கிடையே பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக 60 நாள் போர் நிறுத்த பரிந்துரை முன்மொழியப்பட்டது. இந்த பரிந்துரையை ஹமாஸ் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது இஸ்ரேலும் ஒப்புக்கொண்டால், இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான காசா போர் 60 நாட்களுக்கு  தற்காலிகமாக நிறுத்தப்படும். அப்போது பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். அதற்குப்பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்படலாம் 

NEWSJ TV

News Editor and News Collector