• Sat, Sep 2025

ஆறு நிறைய தண்ணீர் போனாலும் குடிக்க தண்ணீர் இல்லாத அவலம்

ஆறு நிறைய தண்ணீர் போனாலும் குடிக்க தண்ணீர் இல்லாத அவலம்

பேருந்து, லாரியை சிறை பிடித்து போராட்டம் . காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் .

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே, ஆறு நிறைய தண்ணீர் போகும் நிலையில், தங்களுக்கு குடிநீர் வழங்காத, அவல ஆட்சியை கண்டித்து, பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். பிகே புதூரில் சுமார் 150 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், அவர்களுக்கு கடந்த15 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. இது குறித்து பலமுறை புகார் அளித்தும்,  நடவடிக்கை எடுக்காத  நிலையில் பொறுமையிழந்த பெண்கள், அரசு பேருந்து மற்றும் லாரிகளை சிறை பிடித்து விடியா அரசிற்கு எதிராக ஆவேச மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

NEWSJ TV

News Editor and News Collector