• Sat, Sep 2025

அரக்கத்தனமாக கைது செய்த காவல்துறைக்கு கண்டனம்

அரக்கத்தனமாக கைது செய்த காவல்துறைக்கு கண்டனம்

அரக்கர்கள் போல் முகமூடி அணிந்து ஆவேசப் போராட்டம் . விடியா அரசை கண்டித்து சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஸ்டாலின் அரசின் அராஜக காவல்துறையை கண்டித்து தமிழ்நாடு நெஞ்சாலைத்துறை, சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் சிவகங்கையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெடுஞ்சாலை துறை  கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன்பு அரக்கர்கள் போல் முகமூடி அணிந்து நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று, விடியா அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். அப்போது பேசிய நிர்வாகிகள், சென்னையில், கடந்த12 ந்தேதி, தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட, சாலைப் பணியாளர்களை, ஸ்டாலின் அரசின் ஏவல்துறை அரக்கத்தனமாக கைது செய்ததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்வதாக தெரிவித்தனர். 

NEWSJ TV

News Editor and News Collector